Friday, September 22, 2017

இந்தியாவிற்க்கு ஐரோப்பியர்கள் வருகை - போர்த்துக்கீசியர்கள்

இந்தியா பண்டைய காலம் தொட்டே மேற்க்த்திய நாடுகளுடம் வாணிபதொடர்பு கொண்டிருந்தது. இந்தியாவிற்க்குள் நுழைய இரண்டு வழிகள் மட்டுமே இருந்தன வடமேற்க்கு எல்லையில் உள்ள தரை வழி மற்றொன்று கடல்வழி.

முதன்முதலாக ஐரோப்பாவில் இருந்து இந்தியாவிற்க்கு கடல்வழி கண்டுபிடித்த பெருமை போர்த்துகீசிய மாலுமி வாஸ்கோடகாமாவை சாரும். இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக இது கருதப்படுகிறது.1497-ம் ஆண்டு ஜுலை 8 நாள் போர்ச்சுக்கல் நாட்டின் லிஸ்பன் துறைமுகத்தல் இருந்து புறப்பட்ட வாஸ்கோடகாமா 1498-ம் ஆண்டு மே மாதம் 27-ம் தேதி கேராளாவில் உள்ள கள்ளிக்கோட்டை துறைமுகத்தை அடைந்தார்.

கோழிக்கோடு பகுதியை ஆண்ட சாமரின் மன்னரால் வரவேற்க்கப்பட்ட வாஸ்கோடகாமா அவரின் துணைக்கொண்டு பல பண்டக சாலைகளை அமைத்துவிட்டு நாடு திரும்பினார்.



பெட்ரோ அல்வரஸ் கேப்ரால்

 வாஸ்கோடகாமா வெற்றிகரமாக திரும்பியதும் போர்த்துகீசியர்கள் பெட்ரோ அல்வரஸ் கேப்ரால் என்பவர் தலைமையில் 1200 பேர் மற்றும் 13 கப்பல்கள் கொண்ட ஒரு குழுவைதயார் செய்தனர். அக்குழு 1500 மார்ச்சு 9 –ம் நாள் லிஸ்பனில் இருந்து புறப்பட்டு 1500 செப்டம்பர் 13 தேதி கள்ளிக்கோட்டையை வந்தடைந்தார்.
ஆனால் இம்முறை சாமரின் மன்னர்க்கும் கேப்ரால்க்கும் இடையே எழுந்த பிரட்சனை காரணமாக கேப்ரால் கள்ளிக்கோட்டையை விட்டு வெளியேறினார்.
 பின்னர் செப்டம்பர் 14 கொச்சி துறைமுகத்தை அடைந்தார். கேப்ரால்க்கு பின்னர் இரண்டாவது முறையாக வாஸ்கோடகாமா 1502 –ம் ஆண்டு அக்டோபர் 30ம் நாள் இந்தியா வந்தார். கோவா, கொச்சி, கண்ணனூர் ஆகிய இடங்களில் போர்த்துகீசியரின் பண்டக சாலையை வெற்றிகரமாக அமைத்தார்.

பிரான்சிஸ்கோ-டி-அல்மெய்ட்டா 1505-1509

 போர்த்துகீசியர்கள் மூன்று வருடகாலத்திற்க்கு நிரந்திரமாக ஒரு வைஸ்ராயை இந்தியாவிற்க்கு அனுப்ப முடிவு செய்தனர். அதன்படி முதல் போர்த்துகீசிய வைஸ்ராயாக இந்தியாவிற்க்கு அனுப்ப்பட்டவர் பிரான்சிஸ்கோ-டி-அல்மெய்ட்டா. 1500 பேர் கொண்ட ஒரு கப்பற்ப்படையுடன் அவர் இந்தியா வந்தார். அராபிய வணிபர்களால் போர்த்துக்கீசியரக்ளுக்கு ஏற்ப்பட்டது. எனவே அல்மெய்ட்டா அராபிய வணிகர்களின் கொட்டத்தை அடக்கினார்

நீலநீர்க்கொள்கை :-

பிரான்சிஸ்கோ-டி-அல்மெய்ட்டா உருவாக்கிய கொள்கை நீலநீர்க்கொள்கை “கடல் வலிமையை உடையவர்களாக நீங்கள் இருக்கும் வரை இந்தியாவை நீங்கள் உங்களுடையதாக வைத்துக்கொள்ளலாம், கடற்ப்படை இல்லாவிட்டால் கடற்கரையில் ஒரு கோட்டை கூட உங்களுடையதாக இருக்காது”

அரசு இந்த வாத்த்தை ஏற்றுக்கொண்டு நீலநீரக்கொள்கையை வகுத்து கடலாதிக்கத்தை பெருக்க முயற்ச்சித்த்து

அல்போன்சா-டி-அல்புகர்க்:- 1509 - 1515 

அல்மெய்ட்டாக்கு பின்னர் 1509 நவம்பர் 5-ம் நாள் அல்போன்சா-டி-அல்புகர்க் இந்தியாவில் போரத்துகீசிய வைஸ்ராயக பதவியேற்றார். இவர் காலம் போரத்துகீசிய ஆதிக்கத்தின் ஒரு முக்கிய காலம் ஆகும். அவர் பிஜப்ப்பூர் சுல்தானுடன் போரிட்:டு கோவா முழுவதையும் கைப்பற்றினார் அதை இந்தியாவில் போர்த்துகீசிய தலைநகராக்கினார்.

1512-ம் ஆண்டு கோவாவிற்க்கு அருகில் உள்ள பெனஸ்ட்ரீம் கோட்டையை கைப்பற்றினார். 1513-ம் ஆண்டு ஏடனை கைப்பற்றினார், 1515-ம் ஆண்டு மலாக்காவை கைப்பற்றினார். பெர்சியாவுடன் நட்புறவு பாராட்டினார், பாரசீக வளைகுடாவில் உள்ள ஓர்ம்ஸ் தீவில் போர்த்துக்கீசிய மேலாண்மையை நிறுவினார்.

வியாபாரத்திற்க்கான் முக்கிய இடங்களை கைப்பற்றி அதை நேரடியாக ஆளவேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்தார் கலப்பு திருமணங்களை ஊக்குவித்தார் அதன் மூலம் போர்த்துக்கீசிய குடியேற்றங்களை ஏற்படுத்வது மற்றும் குடியேற்றங்கள் ஏற்படுத்த முடியாத இடங்களில் கோட்டைகளை கட்டுதல் போன்ற திட்டங்களை தீட்டினார் இந்திய வியாபாரிகளை போர்த்துகீசியர்களுக்கு வரி செலுத்த வைப்பது அல்போன்சா-டி-அல்புகர்க்கின் முக்கிய நோக்கமாகும். அவர் முகமதியர்களை வெறுப்புடன் நடத்தினார் இந்தியாவின் மேற்க்கு கடற்க்கரை முழுவதிலும் போர்த்துக்கீசிய ஆதிக்கத்தை கொண்டுவந்தார். இந்தியாவில் ஒரு வலிமைமிக்க போர்த்துக்கீசிய கடற்ப்படையை அல்போன்சா-டி-அல்புகர்க் 1515 டிசம்பர் 15-ம் ஆண்டு இறந்தார்.

பதினாறாம் நூற்றாண்டின் இறுதிக்குள் கோவா, டையூ, டாமன், சால்செட், பஸ்சின், பம்பாய், சான்தோம், ஹுக்ளி, கண்ணனூர், மலாக்கா, ஓர்ம்ஸ், கொச்சி போன்ற பகுதிகளில் தங்கள் ஆதிக்கத்தை நிறுவினர். பதினேழாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து போர்த்துகீசியர்களின் வீழ்ச்சி ஆரம்பமாகியது.

அதற்க்கு பல்வேறு காரணங்கள் ஆராயப்படுகின்றன அல்போன்சா-டி-அல்புகர்க் பிறகு வந்த வைஸராய்கள் திறமையற்றவர்கள். இவர்களிடம் உறுதியான கொள்கைகள் இல்லை. போர்த்துகீசியரகளின் நிரவாகம் ஊழல் நிறைந்த்தாக மாறியது. ஊழியரகளின் பெரும்பாலானோர் முறையற்ற செயல்களில் ஈடுபட்டனர். ஒழுக்க குறைவு உடையவர்களாக விளங்கினர்.

1565 வரை விஜயநகர பேர்ரசு வலிமையுடன் இருந்த காரணத்தினால் போர்த்துகீசியரகளால் மேற்க்கு கடற்கரையில் இருந்து உள்நாட்டிற்க்குள் செல்ல முடியவில்லை. மேலும் முகலாய மன்னர் அக்பர் வடக்கில் வலிமைமிக்க அரசை உருவாக்கியிருந்தார்.
தென் அமெரிக்காவில் பிரேசிலின் கண்டுபிடிப்பு போர்த்துகீசியரகளை மேற்க்கு பக்கம் திரும்பியது இந்தியாவில் அவர்கள் காலனி நடவடிக்கைகள் குன்றியது.

1580 –ம் ஆண்டு ஸ்பெயின அரசர் இரண்டாம் பிலிப் போர்ச்சுக்கல் நாட்டின் மீது படையெடுத்து அதை தங்கள நாட்டுடன் இணைத்துக் கொண்டார். இதனால் லிஸ்பன் தன் பெருமையை இழந்தது. ஸ்பானியர்கள தங்கள் நலனையை பெரிதாக கருதினர்.

1602 –ம ஆண்டுக்கு பின்னர் ஆங்கிலேயர்களும், டச்சுக்கார்களும் இந்தியாவுடன் வாணிபத்தொடரபு கொண்டிருந்தனர் 1664-ம் ஆண்டு பிரஞ்சுக்கார்களும் இந்தியாவில் வாணிப தலங்களை ஆரம்பித்தனர் அவர்களோடு போர்த்துக்கீசியர்களால் போட்டிய முடியவில்லை.

1634-ம் ஆண்டு சூரத்தில் இருந்த ஆங்கில் பண்டக சாலையின் கவர்னர்க்கும் கோவா போர்த்துக்கீசிய வைஸ்ராய்க்கும் இடையே ஏற்ப்பட்ட நட்புறவு உடன்படிக்கையின் காரணமாக இங்கிலாந்து இளவரசர் இரண்டாம் சார்லஸ் போர்த்துக்கீசிய இளவரசி காத்தீரினை திருமணம் செய்து கொண்டார் இதனால் அவருக்கு சீதனமாக பம்பாய் கொடுக்கப்பட்டது.

 சுதேச அரசர்களின் எதிர்ப்பையும் அவர்களால் சமாளிக்க முடியவில்லை. போர்த்துக்கீசியர்களின் ஆதிக்கம் குறைய ஆரம்பித்தது. இறுதியாக 1961-ம் ஆண்டு வரை இந்தியாவுடன் தொடர்பில் இருந்தனர் இந்திய விடுதலைக்கு பிறகும் பிரதமர் நேருவின் சமாதான கொள்கைக்கு அவர்கள் ஒத்துழைக்கவில்லை இதனால் 1961 டிசம்பர 18 நாள் நடந்த ஓரே நாள் போரில் கோவா, டையு, டாமன் ஆகிய எஞ்சியிருந்த பகுதிகளை இந்திய யுனியனுடன் இணைந்தது இதன் மூலம் 480 ஆண்டுகள் இந்தியாவுடன் அவர்கள் கொண்டிருந்த தொடர்பு முடிவுக்க வந்தது. 1962 ஜனவரி 12-ம் நாள் முறையான இணைப்பு நடைப்பெற்று . கோவா, டையு, டாமன் பகுதிகள் இந்தியாவுடன் இணைக்கப்பட்டன.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.