Sunday, September 24, 2017

Tamil Nadu Goverment Symbols

தமிழ்நாட்டின் அடையாளங்கள்

தமிழ்நாட்டின் மாநிலச்சின்னம்

திருவல்லிப்புத்தூர் கோவில் கோபுரம்

இக்கோபுரம் 11 நிலைகளை கொண்ட 192 அடி உயரம் கொண்டது. இது பெரியாழ்வார் தன் மகள் ஆண்டாளின் கணவர் திருமாலுக்காக கட்டப்பட்டதாக நம்ப்ப்படுகிறது.


இந்தியாவில் 1956 இல் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட போது, தமிழ் பேசும் பகுதிகள் சென்னை மாகாணமாக உருப்பெற்றன. அந்த காலகட்டத்தில் சென்னை மாகாண முதல்வராக இருந்த காமராசர் தலைமையிலான அரசு, அரசாங்க சின்னமாக திருவில்லிபுத்தூர் கோயில் கோபுரத்தைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால் அதனை வடிவமைத்த ஓவியர் கிருஷ்ணா ராவ், மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் மேற்கு கோபுரத்தை மையமாக வைத்து கோபுரத்திலுள்ள காளை வாகனத்தின் மீது அமர்ந்திருக்கும் சிவ பார்வதி சிலைகள் உட்பட சேர்த்து வடிவமைத்தார்.



மதச்சார்பற்ற நாட்டில் மதரீதியான இடங்களை, முத்திரையில் வைக்கக் கூடாது என்று கோரி 2013 இல் தொடுத்த பொது நல மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து கோவில் கோபுரம் என்பது எந்தவொரு மதத்திற்க்கும் சொந்தமானது அல்ல அது தமிழர்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரம் சார்ந்த்து என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.
குறிப்பு:

தமிழ்நாட்டின் முதலமைச்சராக குமாரசாமி ராஜா (1949-1952) இருந்த போது தன் ஊரில் உள்ள கோவில் கோபுரத்தை தமிழநாடு அரசின் சின்னமாக அறிவத்தார்

குமாரசாமி ராஜா சொந்தமான ராம்கோ சிமெண்டஸ் நிறுவனத்தின் சின்னமும் திருவல்லிபுத்தூர் கோவில் கோபுரமே


தமிழக அரசின் வாசகம்

வாய்மையே வெல்லும்

இந்தியாவின் தேசிய சின்னத்தில இடம் பெற்றுள்ள “சத்யமேவ ஜெயதே” என்ற சமஸ்கிருத வாக்கியம தேவநாகரி எழுத்தில் இருந்து வந்தது. இது முண்டக உபநிடத்தின் புகழ்பெற்ற வாக்கியங்களில ஒன்று.

மாநிலப்பறவை:

மரகதப்புறா

இதன் அறிவியல் பெயர் : chalchophaps Indica


மரகத்புறா பச்சைநிறமுடைய இறக்கையுடன் காணப்படுவதால் இது பச்சை நிறப்புறா எனவும் அழைக்கப்படுகிறது. இது இந்தியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா வரை பரவியுள்ளது.

பறக்கும் திறனுடையது என்றாலும் பெரும்பாலும் நிலத்தில் நடந்தே இரை தேடுகின்றன மழைக்காடுகள் சதுப்புநலக்காடுகள் மற்றும் அதையொத்த புதர் காடுகளில் வாழ்கின்றன.

மாநில விலங்கு:

நீலகிரி வரையாடு

அறிவியல் பெயர்: Nilgiritragus hylocrius

வரை என்றால் மலையுச்சி என்று பொருள் மலையுச்சியில் வாழும் ஆடுகள் என்பதால் வரையாடுகள் எனப் பெயர்பெற்றது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் வாழும் சிறப்புமிக்க உயிரினங்களுள் வரையாடு ஒன்று.


கடல்மட்டத்தில் இருந்து 3500 அடி உயரத்தில் மட்டுமே இந்த வகை ஆடுகள் வாழ்கின்றன. சங்க இலக்கியங்கள் பலவற்றில் வரையாடுகள் பற்றிய குறிப்புகள் உள்ளன.

மாநில மலர் :

செங்காந்தள் மலர்

இதன் அறிவியல் பெயர் :Gloriosa Superba


இதன் மற்றொரு பெயர் கார்த்திகை மலர். கார்த்திகை மாத்த்தில் மட்டுமே பூப்பதால் கார்த்திகை மலர் என்று பெயர் பெற்றது. கபிலர் பாடிய குறிஞ்சிப்பாட்டில் முதலாவதாக பாடப்பட்ட மலர்

புவியிர்ப்பு விசைக்கு எதிராக மேல் நோக்கி தீச்சுடர் போன்று ஒளிரும் தன்மையுடையது


மாநில மரம்

பனை

அறிவியல் பெயர் : Barassus flabellifier

பனை என்பது புல்லினத்தை சார்ந்த தாவரவகை. மரம் என்று பொதுவாக சொல்லப்பட்டாலும் இது மரம் வகையை சார்ந்நது அல்ல. இதை தற்க்கால அறிவியல் மட்டுமன்ற சங்க இலக்கியங்களம் தெளிவுபடுத்துகின்றன.


இந்தியாவில் 10 கோடிக்கும் அதிகாமான் பனை மரங்கள் உள்ளன அவற்றில் பாதிக்கும் அதிகமாக சுமார் 5 கோடிக்கும் அதிகமான மரங்கள் தமிழகத்தில் உள்ளன.

பனை மரத்தினால் எண்ணற்ற பயன்கள் கிடைக்கின்றன இதனால் இதை கேட்டத்தை கொடுக்கும் தேவலோக்த்து மரம் எனக்கூறுவர்

மாநிலப்பாடல்:

தமிழ்த்தாய் வாழ்த்து

பாடல் ஆசிரயர் : மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை

பாடல் இடம் நூல் : மனோன்மணீயம்

மனோண்மனீயம் என்னும் இந்நூல் லார்டு லிட்டன் பிரபு எழுதிய ரகசிய வழி என்னும் நூலின் மொழிப்பெயர்ப்பு “நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்” – எனத்துவங்கும் இந்தப்பாடல் தமிழக அரசு விழாக்க்கள் பள்ளிகள் கல்லூரிகள் ஆகியவற்றில் பாடப்படும் பாடல்.

1970 – ம் ஆண்டு முதலமைச்சர் மு.கருணாநிதி தலைமையிலான அரசு இப்பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவத்தது. ஆரியம் போல் தமிழ் வழக்கழிந்து போகவில்லை என்ற வரிகள் நீக்கப்பட்டு தமிழ்த்தாயை மட்டும் வாழ்த்திப்பாடும் வரிகள் மட்டும் தமிழ்தாய வாழ்தாக ஏற்றக்கொள்ளப்பட்டது.

மாநில நடனம்:

பரதநாட்டியம்

பரதநாட்டியம் பல பெயர்காரணங்கள் உள்ளன.

இது நாட்டிய சாஸ்திரம் எழுதிய பரதமுனிவரின் பெயரால் பரதநாட்டியம் என் பெயர்பெற்றது எனக்கூறுவோர் உளர் ப பாவம் (வெளிப்படுத்தும் தன்மை) ர ராகம் த தாளம் – என்பவற்றை குறிப்பதாலையே பரதம் என பெயர் பெற்றது.


இடைக்காலத்தில் இந்நடனம் சமூக மதிப்பை இழந்நது. மீண்டும் அதை மீட்டெடுத்தப்பெருமை பன்னாட்டு நிறுவனமான கலாஷேத்ராவை சாரும்

தற்போது ஆடப்படும் நடனம் பழங்காலங்களில் கோவில்களில் நடனமங்கையர் ஆடிய சதிராட்டத்தின் முறைப்படுத்தப்பட்ட நடனம். இதை முறைப்படுத்தியவர்கள் தஞ்சை பொன்னையா பிள்ளை சகோதர்கள்

மாநில விளையாட்டு:

கபடி – சடு குடு

தமிழ் மக்களின் பாரம்பரிய விளையாட்டாகும். ஜல்லிக்கட்டுக்கு தயாரவதற்க்கு முன்பு பயிற்ச்சி விளையாட்டாக கபடி விளையாடப்பட்டது தெற்க்கு ஆசிய நாடுகளில் பரவலாக இந்த விளையாட்டு விளையாடப்படுகதிறது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.