Sunday, June 23, 2024

தமிழக தலைவர்கள் : காமராசர் - Part 1


காமராசர் குமாரசாமி மற்றும சிவகாமி அம்மையார்க்கு மகனாக 1905-ம் ஆண்டு சூலை மாதம் 15-ம் நாள் விருதுநகரில் பிறந்தார்.

இவரது இயற்பெயர் காமாட்சி. பெற்றோர்கள் இவரை ராஜா என்று அழைத்தனர். பின்னர் காமாட்சி ராஜா என்று அழைக்கப்பட்ட இவர் காமராசர் என்று மரியாதையோடு அழைக்கப்பட்டார்

குடும்ப பொருளாதார சுமையின் காரணமாக பள்ளிப்படிப்பை 6-ம் வகுப்போடு நிறுத்திக்கொண்டார்.



இவர் பயின்ற பள்ளிகள் ;

  • 1. ஏனாதி வித்யாசாலா
  • 2.சத்திரிய வித்யாசாலா


விடுதலைப்போராட்டம் :

1919 - ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்

1920 - ம் ஆண்டு ஒத்துழையாமை போராட்டத்தில் கலந்து கொண்டார்

1922 - ம் ஆண்டு விருதுநகர் நகராட்சி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். காங்கிரஸ் தலைவர் சத்திய மூர்த்தியை தன் அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டார்.

1924 - ம் ஆண்டு வைக்கம் போராட்டம் மற்றும் சுசீந்திரம் ஆலய நூழைவு போராட்டத்தில் கலந்து கொண்டார்.

1925 - ம் ஆண்டு சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

1927 - ம் ஆண்டு வாள் சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டார்.

1927 - ம் ஆண்டு நேருவின் தலைமையில் இந்திய குடியரசுக் காங்கிரஸ் என்னும் மாநாடு விருதுநகரில் நடைப்பெற்றது. இதற்க்கு காமராசரின் முயற்ச்சியே முக்கிய காரணம்.

காங்கிரஸ் இயக்கத்தை எளிய மக்களிடம் கொண்டு செல்ல கிராமங்களில் பரப்புரை மேற்க்கொண்டார். இதற்க்கு காமராசர்க்கு பக்க பலமாக விளங்கியவர்கள்.

  • அண்ணாமலைப் பிள்ளை
  • பி.எஸ்.குமாரசாமி ராஜா

1928 - ம் ஆண்ட சைமன் கமிஷன் மதுரை வந்த பொழுது அதை கடுமையா எதிரத்தார். ஜார்ஜ் ஜோசப்புடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

சிறைவாசம் :-

1930 -ம் ஆண்டு வேதாரண்யம் உப்பு சத்தியாகிரத்தில் ஈடுபட்டார். இதனால் கைது செய்யப்பட்டு அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 1935-ம் ஆண்டு காந்தி - ஈர்வின் ஒப்பந்தத்தின் படி விடுதலை செய்யப்பட்டார்.

1940 -ம் ஆண்டு தனிநபர் சத்தியாகிரக போராட்டம் சார்பாக காந்தியடிகளை சந்திக்க வார்த்தா செல்லும் வழியில் கரூரில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

1942-ம் ஆண்டு "வெள்ளையனே வெளியேறு " தீர்மானம் நிறைவேற்றப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழகம் திரும்பும் வழியில் கைது செய்யப்பட்டு அமராவது சிறையில் அடைக்கப்பட்டார் பின்னர் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.

சட்டமன்ற உறுப்பினர் :-

1937 - ம் ஆண்டு சென்னை மகாண சட்டமன்றத்திற்க்கு நடைப்பெற்ற தேர்தலில் சாத்தூர் தொகுதியில் இருந்து போட்டியின்றி தேந்தெடுக்கப்பட்டார்.

1941-ம் ஆண்டு வேலூர் சிறையில் இருக்கும் போது விருதுநகர் நகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றார். பின்னர அதை ராஜினாமா செய்தார்.

1946 - ம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலில் சாத்தூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

காங்கிரஸ் மாநிலத்தலைவர் :-

1936-ம் அண்டு காரைக்குடியில் நடைப்பெற்ற காங்கிரஸ் கமிட்டி தேர்தலில் காமராசர் செயலளாராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைவராக எஸ். சத்தியமூர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1940-ம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1946 -ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1947-ல் அகில இந்திய காங்கரஸ் கமிட்டியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.