முகவுரை என்ற சொல் அரசியலமைப்பிற்கு அறிமுகம் அல்லது முன்னுரை என்பதைக் குறிக்கிறது. இது அரசியலமப்பின் அடிப்படைக் கொள்கைகள், நோக்கங்கள் மற்றும் இலட்சியங்களை உள்ளடக்கியது. இது அரசியலமைப்பின் சுருக்கம் அல்லது சாராம்சத்தைக் கொண்டது. இது பெரும்மதிப்புடன் அரசியலமைப்பின் திறவுகோல் என குறிப்பிடப்படுகிறது.
1947 ஆம்
ஆண்டு சனவரி 2 ஆம் நாள் இந்திய
அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜவஹர்லால் நேருவின் குறிக்கோள் தீர்மானத்தின் அடிப்படையில் இந்திய அரசியலமைப்பின் முகவுரை அமைந்துள்ளது.
முகவுரையானது
1976 ஆம் ஆண்டு 42 வது அரசியலமைப்பு சட்ட
திருத்தத்தின்படி திருத்தப்பட்டது. அதன்படி சமதர்மம், சமயச்சார்பின்மை, ஒருமைப்பாடு, என்ற மூன்று புதிய
சொற்கள் சேர்க்கப்ட்டன.
இந்திய
மக்களாகிய நாம் என்ற சொற்களுடன்
இந்திய அரசியலமைப்பின் முகவுரை தொடங்குகிறது.
இந்தியா ஒரு இறையாண்மைமிக்க, சமதர்ம, சமயச்சார்பற்ற, ஜனநாயக குடியரசு என
நமது அரசியலமைப்பின் முகவுரை கூறுகிறது.
1789 ஆம் ஆண்டு பிரெஞ்சு புரட்சியின் போது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியன முக்கிய முழக்கங்களாயின, இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் இவற்றிக்கு முக்கியத்துவம் தரப்பபட்டுள்ளது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.