Monday, June 24, 2024

இந்திய அரசியல் அமைப்பு உருவாக்கம்

1946 ஆம் ஆண்டு அமைச்சரவை துாதுக்குழு திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் நிர்ணய சபையால் இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது.

இச்சபை 292 மாகாணப் பிரதிநிதிகள், 93 சுதேச அரசுகளின் நியமன உறுப்பினர்கள், பலுச்சிஸ்தானின் சார்பில் ஒருவர் மற்றும் மாகாண முதன்மை ஆணையர்கள் சார்பில் மூவர் என மொத்தம்ம 389 உறுப்பினர்கள் இருந்தனர்.

அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் 1946 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் நாள் நடைபெற்றது.

இச்சபையின் தற்காலிக தலைவராக மூத்த உறுப்பனிர் டாக்டர். சச்சிதானந்த சின்கா அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


இந்திய அரசியலமைப்பை உருவாக்க கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் போதே அவர் இறந்தததைத் தொடர்ந்து, இராஜேந்திர பிரசாத் இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் தலைவராகவும், H.C. முகர்ஜி மற்றும் V.T கிருஷ்ணமாச்சாரி இருவரும் துணைத் தலைவர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இக்கூட்டத் தொடர் 11 அமர்வுகளாக 166 நாட்கள் நடைபெற்றது. இக்கூட்டத்தின் போது 2473 திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன. அவற்றுள் சில ஏற்கப்பட்டன. அரசியல் நிர்ணய சபை பல்வேறு குழுக்களின் மூலம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கும் பணியை மேற்கொண்டது.

இந்தய அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழுத் தலைவர் டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் தலைமையின் கீழ் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருாவக்கப்பட்டது. எனவே அவர் இந்திய அரசியல் அமைப்பின் தந்தை என அறியப்படுகிறார்.

இறுதியாக முகவுரை,22 பாகங்கள், 395 சட்டப்பிரிவுகள் மற்றும் 8 அட்டவணைகளைக் கொண்ட இந்திய அரசியலமைப்பு, 1949 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

1950 ஆம் ஆண்டு சனவரி 26 ஆம் நாள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது இந்த நாளே ஒவ்வொரு ஆண்டும் இந்திய குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது.

பிரேம் பெஹாரி நரேன் ரைஜடா என்பவரால் இந்திய அரசியலமைப்புச் சட்டம் இத்தாலிய பாணியில், அவரது கைப்பட எழுதப்பட்டது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.