Thursday, September 14, 2017

இந்திய தேசிய அடையாளங்கள் – விலங்குகள் மற்றும் பறவை

இந்திய தேசிய விலங்குகள் மற்றும் பறவை:

தேசிய விலங்கு: National Animal




இந்தியாவின் தேசிய விலங்கு “பெங்கால் புலி” இதை ராயல் பெங்கால் புலி என்றும் அழைக்கின்றனர்

இதனுடைய அறிவியல் பெயர் Panthera Tigris

1972 – ம் ஆண்டு புலி இந்தியாவின் தேசிய விலங்காக தேர்ந்தெடுக்கப்பட்டது. அதற்க்கு முன்பு வரை சிங்கமே இந்தியாவின் தேசிய விலங்காக இருந்தது


புலிகள் இனம் அழிந்து போகாமல் இருக்க இந்தியாவில் Project Tiger திட்டம் 1973 –ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது

தேசியப்பறவை: National Bird



இந்தியாவின் தேசியப்பறவை மயில்

இதன் அறிவியல் பெயர் PAVO CRISTATUS

1963 –ம் ஆண்டு மயில் இந்தியாவின் தேசியப்பறவையாக தேர்ந்தெடுக்கப்பட்டது

தேசிய பாரம்பரிய விலங்கு: National Heritage Animal 



இந்தியாவின் தேசிய பாரம்பரிய விலங்கு “யானை”
இதன் அறிவியல் பெயர்: ELEPHAS MAXIMUS

2010 –ம் ஆண்டு யானை இந்தியாவின் பாரம்பரிய விலங்காக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

யானைகளின் பாதுகாப்பு குறித்து ஆராய்வதற்க்காக சுற்றுச்சூழல் ஆய்வாளர் டாக்டர் மகேஷ் ரங்கராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் பரிந்துரைப்படி யானை இந்தியாவின் தேசிய பாரமபரிய விலங்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நீர்வாழ் உயிரி National Aquatic Animal



இந்தியாவின் தேசிய நீர்வாழ் உயிரி கங்கை டால்ஃபின் (River Dolphins)

இதனுடைய அறிவியல் பெயர் : (Platanista gangetical)

2010 – ம் ஆண்டு மத்திய அரசு கங்கை டால்ஃபின்களை தேசிய நீர்வாழ் உயிரியாக அறிவித்தது

கண்கள் இருந்தும் பார்வை இல்லாதவை இந்த டால்ஃபின்கள்




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.