Thursday, September 14, 2017

இந்திய தேசிய அடையாளங்கள் – தேசிய கீதம் மற்றும் தேசிய பாடல்


தேசிய கீதம் (நாட்டுப்பண்) : National Anthem


நமது நாட்டின் தேசிய கீதம் “ ஜண கண மண” வங்காள கவிஞர் ரபீந்திரநாத் தாகூரால் இயற்றப்பட்டது.

ரபீந்திரநாத் தாகூர் வங்காள மொழியில் ஏழுதிய கீதாஞ்சலி என்ற கவிதை தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டது. 

5 பத்திகள் கொண்ட இப்பாடலின் முதல் பத்தி தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

1911 ஆண்டு நடைப்பெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் இரண்டாம் நாள் இப்பாடல் முதன் முறையாக பாடப்பட்டது (1911 டிசமபர் 27)


1912 –ம் ஆண்டு தாகூரின் தத்துவ போதினி என்ற பத்திரிக்கையில் பாரத விதாதா என்ற தலைப்பில் வெளியானது.

1919-ம் ரபீந்திரநாத் தாகூர் இதை MORNING SONG OF INDIA என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தார்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய ராணுவப்படையின் தேசியக்கீதமாக இப்பாடலை பயன்படுத்தி வந்தார். 

இந்திய தேசிய ராணுவப்படைக்காக இந்தப்பாடலை பேண்ட் வாத்திய இசைக்குழுவினர் வாசிக்கும் படி இசையமைத்தவர் கேப்டன் “ராம்சிங்

1950 ஜனவரி 24 நாள் இது அரசியல் அமைப்புக்குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தேசியப்பாடல்:

நமது நாட்டின் தேசியப்பாடல் “வந்தே மாதரம்” இது பக்கிம் சந்திர சட்டர்ஜியால் இயற்றப்பட்டது.

1882 –ம் ஆண்டு பக்கிம் சந்திர்ர் வெளியிட்ட “ஆனந்த மடம்” என்ற நாவலில் இந்தப்பாடல் இடம் பெற்றுள்ளது

1896-ம் ஆண்டு நடைப்பெற்ற கொல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் இந்தப்பாடல் முதன் முறையாக பாடப்பட்டது. பாடியவர் – ரபீந்திரநாத் தாகூர்

1950 ஜனவரி 24 –ம் நாள் இந்தப்பாடல் இந்தியாவின் தேசியப்பாடலாக் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

click below to download this post as PDF 
http://ceesty.com/q6h6U2

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.