Thursday, September 14, 2017

இந்திய தேசிய அடையாளங்கள் - தேசியச் சின்னம்


சாரநாத்தில் உள்ள அசோகச ஸ்தூபியில் இருந்து எடுக்கப்பட்ட அசோகசக்கரமே இந்தியாவின் தேசியச்சின்னம் ஆகும் .

அசோக ஸ்தூபி:

அசோக ஸ்தூபி கி.மு.250 ஆம் ஆண்டுகளில் சாரநாத்தில் உருவாக்கப்பட்டது.புத்தர் தமது முதல் போதனையை துவங்கிய இடம் சாரநாத். எனவே அவ்விடத்தில் அசோகர் ஒரு உயரமான கல்தூணை நிறுவினார்.
கவிழ்ந்த நிலையில் உள்ள ஒரு தாமரை மலர்,அதன்மேல் நான்கு சக்கரங்களை பக்கவாட்டில்கொண்ட முரசு போன்ற அமைப்பு கொண்டது. சிங்கங்கள் நான்கும் ஒன்றை ஒன்று பின்புறம் ஒட்டியபடி நிற்கின்றன. இதில் உள்ள சக்கரங்களை தர்ம சக்கரங்கள் எனப்படுகின்றன . தர்ம சக்கரத்தில் 24 ஆரங்கள் உள்ளன .சக்கரங்களுக்கு அருகில் நான்கு பக்கமும் சிங்கம்,குதிரை,எருது,யானை ஆகியவற்றின் உருவங்கள் உள்ளன
இந்த தூணில் நான்கு  சிங்கங்கள் அடுத்தடுத்து நிற்கின்றன.இவை அதிகாரம்,வீரம்,பெருமை,நம்பிக்கை ஆகிய நான்கு பண்புகளைக் குறிக்கின்றன.இவை வட்ட வடிவ பீடத்தில் நிறுவப்படுள்ளன.இந்த பீடத்தின் கிழக்கில் யானை,மேற்கில் குதிரை,தெற்கே எருது,வடக்கில் சிங்கம் பொறிக்கப்பட்டுள்ளன.இந்த பீடம் ஒரு மலர்ந்த தாமரை வடிவத்தில் அமைந்துள்ளது.


தேசிய சின்னம் உருவாக்கம்:
 மாதவ் சாஹ்னி (Madhav Sawhney) என்பவர் அசோக தூண்னை அடிப்படையாக கொண்டு  நமது தேசியச் சின்னத்தை வடிவமைத்தார்.
அசோகத்தூணில் உள்ள சிங்கத்தலைகள் இந்திய அரசு மற்றும் இந்தியக் குடியரசின் சின்னமாக (இலச்சினை) எடுத்துக் கொள்ளப்பட்டது.இதில் மூன்று சிங்கங்கள் மட்டுமே தெரிகிறது.நான்காவது சிங்கம் பார்வையிலிருந்து மறைக்கப்பட்டு உள்ளது.அசோகச் சக்கரம் பீடத்தின் நடுவில் அமைந்துள்ளது.வலது புறத்தில் எருதும்,இடதுபுறத்தில் பாயும் குதிரையும் அமைந்துள்ளது.வலது,இடது ஓரங்களில் தர்மசக்கரத்தின் விளிம்புகள் தெரிகின்றன.பீடத்தின் கீழிருந்து தாமரை நீக்கப்பட்டுள்ளது.
பீடத்தின் கீழே வாய்மையே வெல்லும் என்னும் பொருள் கொண்ட சத்ய மேவ ஜெயதே என்ற குறிக்கோள் கொண்ட வார்த்தை தேவநாகரி எழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ளன.
 இது 1950 ஜனவரி 26 நாள் இந்தியாவின் தேசியச்சின்னமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்திய தேசிய சின்னத்தை மத்திய மற்றும் மாநில் அரசுகளின் அலுவலக நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்த முடியும்
இந்திய குடியரசுத்தலைவர், மத்திய அமைச்சர்கள் மற்றும் அமைச்சகங்கள், இந்திய துதரகங்கள், மாநில ஆளுநர்கள் மற்றும் தலைமை அதிகாரிகள் ஆகியோரின் அதிகாரப்பூர்வ சின்னம் இதுவே.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.