Wednesday, September 13, 2017

இந்திய தேசிய அடையாளங்கள் - தேசியக்கொடி


ஒரு நாட்டின் அடையாளம் அதன் தேசியக்கொடியாகும்.நமது நாட்டின் தேசியக்கொடி மூவர்ணக்கொடி. சுதந்திரம் பெறுவதற்க்கு முன்பே நமது தேசியக்கொடி உருவாக்கப்பட்டுவிட்டது.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு நம் நாட்டின் தேசியக் கொடியை தீர்மானிப்பதற்காக ஒரு கமிட்டி உருவாக்கப்பட்டது . அரசியல் அமைப்பு நிர்ணய சபையின் தலைவரும் இந்தியாவின் முதல் குடியரசுத்தலைவருமான பாபு ராஜேந்திர பிரசாத் தலைமையில் உருவாக்கப்பட்ட அக்கமிட்டியில்

  1. சட்ட மேதை அம்பேத்கர்
  2. அபுல் கலாம் ஆசாத்
  3. சரோஜினி நாயுடு
  4. கே.எம்.பணிக்கர்
  5. சி.ராஜகோபாலச்சாரி
  6. கே.எம்.முன்ஷி
 -ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர்

இக் குழு கொடி சம்பந்தமாக பரிசீலனை செய்து 14 ஜூலை1947 - ல் முடிவுக்கு வந்தது.அதில் தேசியக்கொடியில் எவ்வித மத சாயமும் இருக்ககூடாது என்று முடிவெடுக்கப்பட்டது.

1947 ஜூலை 22 இல் நடந்த அரசியல் சாசன நிர்ணய சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இந்திய தேசியக் கொடி அங்கீகாரம் பெற்றது.

இக்கொடி முதன் முதலாக சுதந்திர இந்தியாவில் டில்லியில் உள்ள வைஸ்ராய் ஹவுஸ்-ல் (தற்போதய ராஷ்டிரபதி பவன்) வைத்து ஜவஹர்லால் நேரு அவர்களால் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ம் நாள் 31 குண்டுகள் முழங்க ஏற்றப்பட்டது.

தேசியக்கொடியில் உள்ள  
காவி - தைரியம் மற்றும் தியாகத்தை 
வெண்மை - உண்மை மற்றும் அமைதியை
பச்சை - நம்பிக்கை மற்றும் வீரத்தை 
-குறிக்கின்றன 

தேசியக்கொடியின் நீள அகலகங்கள் 3:2 எனற விகிதத்தில் அமைய வேண்டும்.

இந்திய தேசியக்கொடியை வடிமைத்தவர் பிங்களி வெங்கையா என்பவர்


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.