இந்திய அரசியலமைப்பு சட்டம் பகுதி 3 இல் சரத்து 12 இல் இருந்து 35 வரையுள்ள சட்டப்பிரிவுகள் அடிப்படை உரிமைகள் பற்றி கூறுகின்றன.
இந்த
அடிப்படை உரிமைகள் ஐக்கிய நாடுகளின் அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகளின் தாக்கத்தால் உருவாக்கினர். இந்திய அரசியலமைப்பு ஏழு அடிப்படை உரிமைகளை
வழங்கியது. ஆனால் தற்போது ஆறு அடிப்படை உரிமைகள்
மட்டுமே உள்ளன.
இந்திய
அரசியலமைப்பின் பகுதி 3 இந்தியாவின் மகாசாசனம் என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் வசிக்கும்
மக்கள் அனைவருக்கும் அடிப்படை உரிமைகள் பொதுவானது. ஆனால் இந்திய குடிமக்களுக்கு மட்டுமேயான சில அடிப்படை உரிமைகளும்
உள்ளன.
பெரும்
முதலாளிகளிடமிருந்து வந்த எதிர்ப்பு காரணமாக
கி.பி. (பொ.ஆ)
1215 இல் இங்கிலாந்து மன்னர் முதலாம் ஜான் என்பவரால் வெளியிடப்பட்ட
உரிமைகள் பட்டயமே மகாசாசனம் எனப்படும். இதுவே குடிமக்களின் அடிப்படை உரிமைகளுடன் தொடர்புடைய முதல் எழுதப்பட்ட ஆவணமாகும்.
1. சமத்துவ
உரிமை
பிரிவு
14 - சட்டத்தின் முன் அனை வரும் சமம்.
பிரிவு
15- மதம், இனம், சாதி, பாலினம் மற்றும் பிறப்பிடம் இவற்றின்
அடிப்படையில்
பாகுபடுத்துவதைத் தடை செய்தல்.
பிரிவு
16 - பொது வேலைவாய்ப்புகளில் சமவாய்ப்பளித்தல்
பிரிவு
17 – தீண்டாமையை ஒழித்தல்
பிரிவு
18 – இராணுவ மற்றும் கல்வி சார் பட்டங்களைத் தவிர மற்ற பட்டங்களை நீக்குதல்
2. சுதந்திர உரிமை
பிரிவு
19 – பேச்சுரிமை, கருத்து தெரிவிக்கும் உரிமை, அதைியான முறையில் கூட்டம் கூடுவதற்க்கு
உரிமை, சங்கங்கள் அமைப்புகள் தொடங்க உரிமை, இந்திய நாட்டுக்குள் விரும்பிய இடத்தில்
வசிக்கும் மற்றும் தொழில் செய்யும உரிமை
பிரிவு
20- குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கூன உரிமை மற்றும் தண்டனையில் இருந்து பாதுகாப்பு
பெற உரிமை
பிரிவு
21 – வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்க்குப் பாதுகாப்பு பெறும் உரிமை
பிரிவு
21 A – தொடக்ககல்வி பெறும் உரிமை
பிரிவு
22 – சில வழக்குகளில் கைது செய்து, தடுப்புக் காவலில் வைப்பதற்கெதிரான பாதுகாப்பு உரிமை.
3.சுரண்டலுக்கெதிரான
உரிமை
பிரிவு
23 - கட்டாய வேலை , கொத்தடிமை முறை மற்றும் மனிதத்தன்மை யற்ற வியாபாரத்தைத் தடுத்தல்.
பிரிவு
24 - தொழிற்சாலைகள் மற்றும் ஆபத்தான இடங்களில் குழந்தைத் தொழிலாளர் முறையை தடுத்தல்
4. சமயச்சார்பு உரிமை
பிரிவு
25 – எந்த ஒரு சமயத்தையும் ஏற்கவும் பின்பற்றவும் உரிமை
பிரிவு
26 – சமய விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமை
பிரிவு
27 – எந்தவொரு மதத்தை பரப்புவதற்க்காக வரி செலுத்துவதற்கெதிரான உரிமை
பிரிவு
28 – மதம் மற்றும் கல்வி நிறுவனங்களில் நடைபெறும் வழிபாடு மற்றும் அறிவுரை நிகழ்வுகளில்
கலந்து கொள்ள உரிமை
5. கல்வி கலாச்சார
உரிமை
பிரிவு
29 – சிறுபான்மையினரின் எழுத்து, மொழி, மற்றும் கலாச்சாரப் பாதுகாப்பு
பிரிவு
30 – சிறும்பான்மையினரின் கல்வி நிறுவனங்களை நிறுவி, நிர்வகிக்கும் உரிமை
6. அரசியல்
அமைப்புக்கு உட்பட்டு கீர்வு காணும் உரிமை
பிரிவு
32 – தனிப்பட்டவரின், அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும் போது நீதிமன்றத்தை அணுகி உரிமையைப்
பெறுதல்
1978-ம் ஆண்டு
44வது அரசியல் அமைப்பு சட்டத்திருத்ததின்படி சொத்து உரிமை பிரிவு 31 அடிப்படை உரிமைகளில்
இருந்து நீக்கப்பட்டது.
இது இந்திய
அரசியல் அமைப்புச் சட்டம் பகுதி XII பிரிவு
300 ஏ வின் கீழ் இது ஒரு சட்ட உரிமையாக வைக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.