சி.என். அண்ணாதுரை (Conjeevaram Natarajan Annadurai) அவர்கள் செப்டம்பர் 15,1909 - இல்
காஞ்சிபுரத்தில் ஒரு ஏழை நெசவாளர்
குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை நடராஜனார்,
தாய் பங்காரு அம்மாள்.
- இவர்
தனது சிற்றன்னையான இராசாமணி அம்மையாரிடம் வளர்ந்தார்.
- இவர்
காஞ்சிபுரம் பச்சையப்பன் பள்ளியில் பயின்றார்.
- இவர்
1927 இல் காஞ்சிபுரம் நகராட்சியில் எழுத்தராகப் பணியாற்றினார்.
- இவர்
1930 இல் இராணி அம்மையாரை மணந்தார்.
- இவர்
முதன்முதலாக எழுதிய 'பெண்கள் சமத்துவம்' என்னும்கட்டுரையானது
மாசிலாமணி முதலியார் வெளியிட்டு வந்த 'தமிழரசு' என்னும் இதழில் 1931-ஆம் ஆண்டு வெளிவந்தது.
- இவர்
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ (ஹானர்ஸ்)
பட்டமும், பிறகு எம். ஏ (பொருளாதாரம்
மற்றும் அரசியல்) பட்டமும் பெற்றார்.
- சென்னையில்
உள்ள கோவிந்தப்ப நாயக்கர் பள்ளியில் ஆசிரியராக இவர் பணியாற்றினார்.
பொது
வாழ்க்கை:
பேராசிரியர் 'வரதராஜனும்', நீதிக்கட்சியின் 'வெங்கடசாமியும்' முக்கியமான மூன்று கருத்துகளை அண்ணாவுக்கு அறிமுகப்படுத்தி அவர் பொதுவாழ்வில் ஈடுபட
காரணமாக இருந்தனர்.
அந்தக் கருத்துகள்:
- சமூக
நீதி
- பிராமணரல்லாதார்
முன்னேற்றம்
- அரசியல்
கட்சி மூலம் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்துவது
இவர்
சாதி ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற கொள்கையுடன் நீதிக்கட்சியில்
1934 - இல் முறைப்படி சேர்ந்தார். இதற்கு அரசியல் இரட்டையர்களான'சண்டே
அப்சர்வர்' இதழ் ஆசிரியர் பி.
பாலசுப்பிரமணியனும், நீதிக்கட்சியின் 'ஜஸ்டிஸ்' இதழ் ஆசிரியர் டி.வி. நாதனும் உடனடிக்
காரணமாக இருந்தனர்.