Monday, June 24, 2024

அடிப்படை உரிமை - இந்திய அரசியல் அமைப்பு

இந்திய அரசியலமைப்பு சட்டம் பகுதி 3 இல் சரத்து 12 இல் இருந்து 35 வரையுள்ள சட்டப்பிரிவுகள் அடிப்படை உரிமைகள் பற்றி கூறுகின்றன.

இந்த அடிப்படை உரிமைகள் ஐக்கிய நாடுகளின் அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகளின் தாக்கத்தால் உருவாக்கினர். இந்திய அரசியலமைப்பு ஏழு அடிப்படை உரிமைகளை வழங்கியது. ஆனால் தற்போது ஆறு அடிப்படை உரிமைகள் மட்டுமே உள்ளன.

இந்திய அரசியலமைப்பின் பகுதி 3 இந்தியாவின் மகாசாசனம் என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் அடிப்படை உரிமைகள் பொதுவானது. ஆனால் இந்திய குடிமக்களுக்கு மட்டுமேயான சில அடிப்படை உரிமைகளும் உள்ளன.

இந்திய அரசியல் அமைப்பு :- முகவுரை

 முகவுரை என்ற சொல் அரசியலமைப்பிற்கு அறிமுகம் அல்லது முன்னுரை என்பதைக் குறிக்கிறது. இது அரசியலமப்பின் அடிப்படைக் கொள்கைகள், நோக்கங்கள் மற்றும் இலட்சியங்களை உள்ளடக்கியது. இது அரசியலமைப்பின் சுருக்கம் அல்லது சாராம்சத்தைக் கொண்டது. இது பெரும்மதிப்புடன் அரசியலமைப்பின் திறவுகோல் என குறிப்பிடப்படுகிறது.

1947 ஆம் ஆண்டு சனவரி 2 ஆம் நாள் இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜவஹர்லால் நேருவின் குறிக்கோள் தீர்மானத்தின் அடிப்படையில் இந்திய அரசியலமைப்பின் முகவுரை அமைந்துள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிறப்புக் கூறுகள்

 

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிறப்புக் கூறுகள்

உலகிலுள்ள எழுதப்பட்ட அனைத்து அரசியலமைப்களை விடவும் மிகவும் நீளமானது

பெரும்பான்மையான கருத்துகள் பல்வேறு நாடுகளின் அரசியலமைப்பில் இருந்து பெறப்பட்டவை

இது நெகிழாத்தன்மை கொண்டதாகவும், நெகிழும் தன்மை கொண்டதாகவும் உள்ளது. கூட்டாட்சி முறை அரசாங்கத்தை ஏற்படுத்துகிறது.

இந்திய அரசியல் அமைப்பு உருவாக்கம்

1946 ஆம் ஆண்டு அமைச்சரவை துாதுக்குழு திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் நிர்ணய சபையால் இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது.

இச்சபை 292 மாகாணப் பிரதிநிதிகள், 93 சுதேச அரசுகளின் நியமன உறுப்பினர்கள், பலுச்சிஸ்தானின் சார்பில் ஒருவர் மற்றும் மாகாண முதன்மை ஆணையர்கள் சார்பில் மூவர் என மொத்தம்ம 389 உறுப்பினர்கள் இருந்தனர்.

அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் 1946 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் நாள் நடைபெற்றது.

இச்சபையின் தற்காலிக தலைவராக மூத்த உறுப்பனிர் டாக்டர். சச்சிதானந்த சின்கா அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வரலாறு 6th-12th All Boxes

 பள்ளிப்பாடப்புத்தகத்தில் 6 வகுப்பு முதல் 12 வகுப்பு வரை பள்ளிப் பாடப்புத்தகத்தில் உள்ள பாக்ஸ் தரவுகளின் தொகுப்பு.

TNPSC-ஐ பொருத்தவரை வரலாறு முக்கியமா பாடத்திட்டம். குறைந்தது 5 முதல் 10 கேள்விகள் வரை கேட்கப்பட வாய்ப்புகள் உள்ளன. பள்ளிப்பாடப்புத்தகத்தில் கட்டமிடப்பட்டு காட்டப்பட்டுள்ள குறிப்புகளில் இருந்து பெரும்பான்யான நேரங்களில் இந்தப் பகுதியில் இருந்து அதிகப்படியான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

Sunday, June 23, 2024

தமிழக தலைவர்கள் : காமராசர் - Part 1


காமராசர் குமாரசாமி மற்றும சிவகாமி அம்மையார்க்கு மகனாக 1905-ம் ஆண்டு சூலை மாதம் 15-ம் நாள் விருதுநகரில் பிறந்தார்.

இவரது இயற்பெயர் காமாட்சி. பெற்றோர்கள் இவரை ராஜா என்று அழைத்தனர். பின்னர் காமாட்சி ராஜா என்று அழைக்கப்பட்ட இவர் காமராசர் என்று மரியாதையோடு அழைக்கப்பட்டார்

குடும்ப பொருளாதார சுமையின் காரணமாக பள்ளிப்படிப்பை 6-ம் வகுப்போடு நிறுத்திக்கொண்டார்.



இவர் பயின்ற பள்ளிகள் ;

  • 1. ஏனாதி வித்யாசாலா
  • 2.சத்திரிய வித்யாசாலா