இந்திய அரசியலமைப்பு சட்டம் பகுதி 3 இல் சரத்து 12 இல் இருந்து 35 வரையுள்ள சட்டப்பிரிவுகள் அடிப்படை உரிமைகள் பற்றி கூறுகின்றன.
இந்த
அடிப்படை உரிமைகள் ஐக்கிய நாடுகளின் அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகளின் தாக்கத்தால் உருவாக்கினர். இந்திய அரசியலமைப்பு ஏழு அடிப்படை உரிமைகளை
வழங்கியது. ஆனால் தற்போது ஆறு அடிப்படை உரிமைகள்
மட்டுமே உள்ளன.
இந்திய
அரசியலமைப்பின் பகுதி 3 இந்தியாவின் மகாசாசனம் என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் வசிக்கும்
மக்கள் அனைவருக்கும் அடிப்படை உரிமைகள் பொதுவானது. ஆனால் இந்திய குடிமக்களுக்கு மட்டுமேயான சில அடிப்படை உரிமைகளும்
உள்ளன.